உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்ந்த மாணவர்கள்

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்ந்த மாணவர்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''சமுதாயம் மேம்பட கல்வி அவசியம். கல்வியை சேவை மனப்பான்மையுடன், மாணவர்களுக்கு வழங்குவதில் ஆசிரியர்களுக்கு நிகரானவர்கள் எவரும் இல்லை. ''சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாணவர்களாக உள்ளவர்களுக்கு, ஆசிரியர்கள் எந்த பிரதிபலன் பார்க்காமல், தங்களிடம் படித்த மாணவன் உயர்ந்த நிலைக்கு உயர வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றுவார். ''ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, வாழ்த்துவதில் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் பெருமை கொள்கிறது,'' என்றார். தொடர்ந்து, மாணவர்கள் சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், தாய்மார்கள் பிரிவு தலைவர் விஜினா ஆகியோர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை