சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மாணவர்கள், மக்கள் பாதிப்பு
குன்னுார்: குன்னுார் ஸ்டான்லிபார்க் அருகே குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குன்னுார் ஸ்டான்லி பார்க் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையான வடிகால் வசதியின்றி சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக, காலை நேரங்களில் இந்த வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் கழிவுநீரை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இவ்வழியாக செல்லும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, குன்னுார் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.