உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தொழிற்சாலையில் மாணவர்கள் விசிட்

 தொழிற்சாலையில் மாணவர்கள் விசிட்

பந்தலுார்: பந்தலுார் அருகே முதிரகொல்லி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஹிந்துஜா மற்றும் லேர்னிங் லிங்க் பவுண்டேஷன் இணைந்து, 'ரோடு டு ஸ்கூல்' எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளை அளிக்கின்றன. அதில், ஒரு கட்டமாக பள்ளி மாணவர்கள், 'சசக்ஸ்' என்ற இடத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தீபா தலைமை வகித்தார். அங்கு தேயிலை தொழிற்சாலை மேலாளர் சந்திரபிரகாஷ், தொழிற்சாலை அலுவலர் கிறிஸ்டோபர் ஆகியோர், பசுந்தேயிலையில் தேயிலை துாள் தயாரிப்பு குறித்து மாணவர்களுக்கு நேரில் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ