உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொழில் முனைவோருக்கு மானியத்தில் கடன் உதவி; விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு

தொழில் முனைவோருக்கு மானியத்தில் கடன் உதவி; விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு

ஊட்டி; 'தொழில் முனைவோருக்கு, சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் வழங்கும் கடன் உதவியை பயன்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: நீலகிரியில் கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் பொருட்டு, கலைஞர் கைவினை திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 3 லட்சம் ரூபாய் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் பெறலாம். 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்கும் தொழில் முனைவோருக்கு, திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். அதில், 'கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினை பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகை அலங்காரம், அழகு கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை,' உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் துவங்க விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் நபர்கள் www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 0423---2443947, 8925533995 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி