உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினரை ஏற்ற மறுக்கும் அரசு பஸ்களால் திடீர் போராட்டம்

பழங்குடியினரை ஏற்ற மறுக்கும் அரசு பஸ்களால் திடீர் போராட்டம்

குன்னுார், ; குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் பழங்குடியினரை அரசு பஸ்களில் ஏற்றி செல்லாமல் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து அரசு பஸ்சை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், குரும்பாடி, புதுக்காடு, கோழிக்கரை, வடுகதோட்டம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பழங்குடியினர் அத்தியாவசிய தேவைக்காக, குன்னுார் வர அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் பெரும்பாலான அரசு பஸ்கள் பழங்குடியின பயணிகளை ஏற்றி செல்வதில்லை. இதனால், 'பள்ளி மாணவ, மாணவிகள் நோயாளிகள், முதியவர்கள் அத்தியாவசிய பணிக்கு செல்வோர்,' என, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மேட்டுப்பாளையம் செல்லும் தங்காடு கன்னேரிமந்தனை உள்ளிட்ட ஒரு சில பஸ்கள் மட்டுமே பயணிகளை அழைத்து செல்கின்றன.

பழங்குடியினர் திடீர் போராட்டம்

இந்நிலையில், நேற்று குன்னுாரில் இருந்து குரும்பாடி புதுக்காடு கிராமங்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்றி செல்ல மறுத்ததால், பழங்குடியினர் அரசு பஸ்சை மறித்து திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த போக்குவரத்து கழகத்தினர் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி,தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், 'அரசு பஸ்களை கட்டாயம் பழங்குடி கிராம பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்,' என,போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட பழங்குடியினர், 'மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் பஸ்களை நிறுத்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,' என, அதிகாரிகளிடம் தெரிவித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

koderumanogaran
ஜன 10, 2025 16:56

அந்த வழித்தடத்தில் இயங்கும் சாதாரண பேருந்துகள் அனைத்தும் விரைவு பேருந்துகள் என்ற பெயரில் இயங்கி வருகின்றன.இந்த குறிப்பிட்ட நிறுத்தங்கள் நிலைகளாக இல்லை எனவே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் ₹25 . ஆனால் இந்த பேருந்துகளில் மோசடியாக32வசூலிக்கப்படுகிறது.கன்னூரிலிருந்து குரும்பாடி செல்ல சாதாரண கட்டணம் ₹௧௨.ஆனால் இந்த பேருந்துகளில் ₹25, இதனால் பயணிகள் ஏறுவது இல்லை.எனவே பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன.இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் த.அ.போக்குவரத்துக்கழகமும் நீலகிரி மாவட்ட நிர்வாகமும் அதை மதிக்காமல் இருப்பதால் தொடர்ந்து விரைவு கட்டணவசூல் நடக்கிறது.இதுதான் பேருந்துகள் நிறுத்தாமல் போவதற்கான காரணம்.


சமீபத்திய செய்தி