உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடை வெப்பம் அதிகம்; குடையுடன் தேயிலை பறிப்பு

கோடை வெப்பம் அதிகம்; குடையுடன் தேயிலை பறிப்பு

கூடலுார்,; கூடலுாரில் வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், பெண் தொழிலாளர்கள் தலையில் குடையுடன் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கூடலுாரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெளியில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இங்குள்ள தேயிலை தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் வெப்பத்தை பொருட்படுத்தாமல் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சில தனியார் எஸ்டேட்களில் பெண் தொழிலாளர்கள், தலையில் சிறிய குடையுடன், பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வழியாக செல்லும், வெளி மாநில சுற்றுலா பயணிகள், அவர்களை ரசித்து போட்டோ எடுத்து செல்கின்றனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம், வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால், வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சிறிய குடைகளை தலையில் அணிந்து, பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை