உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் மழை பாதிப்பு பகுதிகளில் ஆய்வு

பந்தலுாரில் மழை பாதிப்பு பகுதிகளில் ஆய்வு

பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று காலை சாரல் மழையுடன் மிதமான காலநிலை நிலவி வந்தது. இதனால், அத்திமாநகர் பகுதியில் சாலை ஓரம் அமைக்கப்பட்டு இருந்த, பயணிகள் நிழற்குடை, முழுமையாக இடிந்து விழுந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு இடிந்ததால், நிழற்குடையில் பயணிகள் யாரும் இல்லாத நிலையில் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து கிராம தலைவர் தேவராஜ் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளதுடன், புதிய நிழற்குடை அமைக்கவும் வலியுறுத்தி உள்ளார். பிதர்காடு காமராஜ் நகர் பகுதியில், வீடுகளின் முன்பாக மண்ணரிப்பு ஏற்பட்டு, விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மரம் சாய்ந்தும் சில வீடுகள் பாதிக்கப்பட்டது. மேலும், உப்பட்டி அருகே சேலக்குன்னா பகுதியில் இருந்து, வாழவயல் வழியாக குந்தலாடி செல்லும் சாலை, பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி ஆறு பாயும் நிலையில், தடுப்பு சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் அதிகரித்து, சிமென்ட் சாலையை ஒட்டி மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் புதிய சாலை பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளை பேரிடர் கண்காணிப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையில், தாசில்தார் சிராஜுநிஷா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ.க்கள் அசோக்குமார், சபீர்கான், மற்றும் உதவியாளர்கள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை