தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி: ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில செயலாளர் ஜானகிராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார் இறப்பிற்கு காரணமாக இருந்த, டி.ஆர்.டி.ஏ., திட்ட இயக்குனர் ஜெயசுதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், செந்தில் குமாரின் மனைவியின் வாக்குமூலம் அடிப்படையில், மனித உரிமை ஆணையமே தலையிட்டு, வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷம் எழுப்பப்பட்டது. இதில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்க நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். இதேபோல, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.