உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலைக்கு ரூ.40 விலை நிர்ணயம் வேண்டும்

தேயிலைக்கு ரூ.40 விலை நிர்ணயம் வேண்டும்

குன்னுார் : 'பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலையாக கிலோவிற்கு, 40 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன், மத்திய அமைச்சர் முருகனுக்கு அனுப்பிய மனு :நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் சாகுபடி செய்யும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிரமப்படுகின்றனர். பசுந்தேயிலைக்கு உற்பத்தி செலவும் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான உற்பத்தி செலவு, 25 ரூபாய் ஆகும் நிலையில், ஒரு கிலோ பசுந் தேயிலைக்கு விலையாக, 15 ரூபாய் மட்டும் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 40 ரூபாய் கிடைக்காவிட்டால் மேலும் பாதிப்பு ஏற்படும்.'பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க, சாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் படி நிர்ணயம் செய்யப்படும்,' என்ற வாக்குறுதியை கடந்த தேர்தல் நேரங்களில் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் வாக்குறுதியில் அளித்தன. ஆனால், தேர்தலுக்கு பின்பு எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.கடந்த ஏப்., மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், இந்த வாக்குறுதிகளை முன்வைத்ததால், வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மத்திய அமைச்சர் என்ற வகையில் நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 40 ரூபாய் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை