கோவில் ஆண்டு விழா துவக்கம்
குன்னுார்; குன்னுார் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 52வது ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது.குன்னுார் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், 52வது ஆண்டு திருவிழா துவங்கியது. காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம், உச்சபூஜை ஆகியவை நடந்தது.இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், கொடிமரபூஜை அலங்கார பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை பகவதி சேவை, நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கின்றன. முக்கிய திருவிழாவான நாளை காலை, 9:00 மணிக்கு கலச பூஜை தீபாராதனை மாலை, 4:00 மணிக்கு ஐயப்பன் திருவீதி உலா தாளப்பள்ளி செண்டை மேள வாத்தியங்களுடன் நடக்கிறது.