பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம்
பாலக்காடு: கேரளாவில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கி, வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், பாலக்காடு நகரில் உள்ள மாயன் மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பத்தாம் வகுப்பு மொழி பாடத்தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு, தேன், கற்கண்டு ஆகியவை வழங்கி, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்ந்து தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ப்ரீஜா, முதல்வர் லதா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அரவிந்தாக்சன், துணைத்தலைவர் லைலா ஆகியோர் தலைமையில், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.