உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சேதமடைந்த சுவர் சீரமைக்கணும்

 சேதமடைந்த சுவர் சீரமைக்கணும்

கூடலுார்: கூடலுார் செலுக்காடி பகுதியில் சேதமடைந்துள்ள அரசு பள்ளி தடுபபு் சுவரை சீரமைக்க வேண்டும். கூடலுார் வேடன்வயல் செலுக்காடி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில், மண்சரிவு ஏற்படுவதை தடுக்க, வேடன்வயல் - செலுக்காடி சோலையோரம் கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சுவரின் ஒரு பகுதி, சில ஆண்டுகளுக்கு முன் சேதம் அடைந்தது. இதனை சீரமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இப்பகுதிக்கு வரும் மாணவர்கள், சேதமடைந்த தடுப்பு சுவர் அருகே தவறி விழும் ஆபத்து உள்ளது. பெற்றோர் கூறுகையில்,'சேதமடைந்த சுவரை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவர்கள் தவறி விழுந்து ஆபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சுவரை சீரமைக்க வேண்டும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !