உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  விவசாய தேவைக்காக மூன்று பாசன நீர்தேக்க தொட்டிகள்: பணியை துவக்கிய வேளாண் பொறியியல் துறை

 விவசாய தேவைக்காக மூன்று பாசன நீர்தேக்க தொட்டிகள்: பணியை துவக்கிய வேளாண் பொறியியல் துறை

கூடலுார்: முதுமலை, மசினகுடி பூதநத்தம் கிராமத்தில், பழங்குடியின விவசாய தேவைக்காக, 68 லட்சம் ரூபாய் செலவில், 3 நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியை, வேளாண் பொறியியல் துறையினர் துவங்கியுள்ளனர். முதுமலை, மசினகுடி பூதநத்தம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின குடும்பங்களுக்கு சொந்தமாக மொத்தம், 75 ஏக்கர் விவசாயம் நிலங்கள் உள்ளது. இங்கு பாசன நீர் வசதி இல்லாததால், விவசாயம் மேற்கொள்ள முடியாவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், மூன்று இடங்களில் தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாசன நீர் தொட்டிகள் அமைக்க, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 68 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, வேளாண் பொறியியல் துறை சார்பில், பாசன நீர் தொட்டிகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இப்பணிகளை வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பூபாலன், உதவி பொறியாளர் சந்துரு ஆய்வு செய்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'பழங்குடியினர் மக்களுக்கு விவசாயத்தில் ஊக்குவிப்பு அளிக்கும் வகையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பாசன நீர் தொட்டி அமைக்கும்பணி நடந்தது வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ