வீணாகிபோன இ--டாய்லெட் திட்டம்; துர்நாற்றத்தால் மக்கள் பாதிப்பு
ஊட்டி : ஊட்டி மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 'இ-டாய்லெட்' வீணாகி வருகிறது.ஊட்டியில் உள்ளூர் மக்களுடன், சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மக்கள் நலன் கருதி, ஊட்டி நகரில், மத்திய பஸ் நிலையம், தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 10 இ-டாய்லெட்கள் கட்டப்பட்டன.இந்த டாய்லெட்களை நகராட்சி நிர்வாகம் போதிய அளவில் பராமரிக்கவில்லை. இதனால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், வெறுமனே விடப்பட்டுள்ளது.குறிப்பாக, ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிரே கட்டுப்பட்டுள்ள டாய்லெட் பராமரிக்காமல் உள்ளது.இதனால், துர்நாற்றம் வீசி சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டுள்ளது. இந்த ஒட்டியுள்ள நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மக்கள் கூறுகையில், 'மத்திய அரசு திட்டத்தில் ஏ.டி.சி., உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டு வரும் கழிப்பிடம் போன்று, மத்திய பஸ் நிலையம் எதிரே வீணாகியுள்ள இ-டாய்லெட்டை அகற்றி, புதிய கழிப்படம் கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம்,' என்றனர்.