குன்னுார் வீடுகளில் இரவில் பூத்த நிஷாகந்தி
குன்னுார்,; குன்னுாரில் சிலரின் வீடுகளில் பிரம்ம கமலம் என அழைக்கப்படும் நிஷாகந்தி மலர்கள் பூத்துள்ளன.இந்த மலர்கள் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த மலர் வாசம் அனைவரையும் ஈர்க்கிறது. ஹிந்து மதத்தில் சிவனுக்கு உகந்த மலராக இது கருதப்படுகிறது. மலரின் உட்புறத்தில் பல நாகங்கள் இருப்பது போலவும் இருக்கும். 'இரவின் ராணி'எனவும் இந்த மலர் அழைக்கப்படுகிறது. தற்போது, குன்னுார் டென்ட்ஹில் பகுதியில் உள்ள ரமேஷ், ஆப்பிள்பி பகுதியில் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வீடுளில் இந்த பூக்கள் பூத்துள்ளது. அருகிலுள்ள மக்கள் பார்வையிட்டு ரசித்து 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.