உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடுநிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை; மாணவர் சேர்க்கை தயக்கம் காட்டும் பெற்றோர்

நடுநிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை; மாணவர் சேர்க்கை தயக்கம் காட்டும் பெற்றோர்

குன்னுார்; நீலகிரியில், நிரந்தர பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்காததால், அரசு நடுநிலை பள்ளிகளில், தற்போது மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ., அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதே சமயம் சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர்கள் நியமித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படாத காரணத்தினால் மாணவர்களை, பள்ளியில் சேர்க்க பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே தனியார் பள்ளிகளை பலரும் நாடி செல்கின்றனர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில்,''தற்போது முக்கிய பாடப்பிரிவுகளாக அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில், பயிற்சி பெறாத ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்துவது சிரமம். பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தான் நடத்த வேண்டும். ஆங்கில அறிவுக்கு, ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும். ஆனால், குறைந்த சம்பளத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நடுநிலை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களால், அறிவியல், கணிதம் போன்ற பாடங்கள் திறமையாக போதிக்க வாய்ப்பில்லை என பெற்றோர் புகார் தெரிவிக்கின்றன.இதுனால், தங்களுடைய குழந்தைகளை நடுநிலை பள்ளிகளுக்கு அனுப்ப தயங்குகின்றனர். நடப்பாண்டு பல பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.எனவே, ஏழை, எளிய தோட்ட தொழிலாளர்கள் குழந்தைகள் அதிகம் படிக்கும் நீலகிரியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கிலம் பாடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ