உடுப்பி கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் காயம்
பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் இருந்து, 16 பேர், குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மூகாம்பிகா கோவிலுக்கு சென்றனர். உடுப்பியில், காலை, 7:00 மணிக்கு வேகமாக சென்ற வேன், சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில், வேனின் முன்பகுதி முழுவதும், சிதைந்தது, வேனில், 16 பேர் பயணம் செய்த நிலையில், 'இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு முதியவர்கள்,' என, நான்கு பேரை தவிர, 12 பேர் காயங் களுடன் வேனில் இருந்து மீட்கப்பட்டனர். அந்தப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனைவரையும் கொண்டு சென்றனர். விபத்து குறித்து உடுப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து, டிரைவர் சதீஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.