அரசு பஸ் மீது மோதிய டிப்பர் லாரி; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
குன்னுார் : குன்னுாரில் அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர்.குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு நேற்று காலை, 7:30 மணியளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஊட்டியில் இருந்து குன்னுார் நோக்கி வந்த டிப்பர் லாரி, அரசுபஸ் பக்கவாட்டு பகுதி யில் மோதியது. அதில் பஸ்சின் பின் இருக்கைகளில் பயணிகள் யாரும் இல்லாத நிலையில் பாதிப்பு ஏற்படவில்லை. முன்பக்கம் அமர்ந்திருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த விபத்தில் பஸ்சின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.டிரைவர்கள் கூறுகையில், 'குன்னுார் - ஊட்டி -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிவேகத்தில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளை போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளதால், இது போன்ற விபத்துக்கள் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்,' என்றனர்.