உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோடர் எருமை பாலில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மையம் திறப்பு

தோடர் எருமை பாலில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மையம் திறப்பு

ஊட்டி; ஊட்டி அருகே பகல்கோடு மந்தில் தோடர் எருமை பால் வாயிலாக மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மையம் திறக்கப்பட்டது. ஊட்டி அருகே பகல்கோடு மந்தில், தோடர் எருமை பால் வாயிலாக உற்பத்தி செய்யப்படும், மதிப்பு கூட்டு பொருட்கள் மையத்தை கலெக்டர் லட்சுமி பவ்யா திறந்து வைத்தார். இந்த மையத்திற்கு, 22 தோடர் கிராமங்களில் இருந்து பால் சேகரிக்கப்பட்டு வருகிறது. எருமை பாலை கொண்டு பன்னீர் பால்கோவா, நெய் சீஸ் போன்றவை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. நீலகிரி பழங்குடியினர் பாரம்பரிய மற்றும் கலாசார பாதுகாப்பு சங்கத் தலைவர் மணி கூறுகையில், ''தோடர் எருமைகளை உலகில் வேறு எங்கும் காண முடியாது. நீலகிரி மலையில் இருக்கும் இந்த எருமைகளுக்கு சிறு வயது முதல் எந்தவிதமான தடுப்பூசிகளும் போடப்படுவது கிடையாது. புண்ணாக்கு போன்றவையும் வழங்குவதில்லை. இயற்கையாக கிடைக்ககூடிய புல் தீவனங்கள் வாயிலாக நுாறு சதவீதம் தரமான பால் உற்பத்தி செய்வதால் எவ்வித பாதிப்பு இருக்காது,'' என்றார் நிகழ்ச்சியில் , மாவட்ட வன அலுவலர் கவுதம், ஆவின் மேலாளர் ராஜேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை