உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இன்றைய அரசியல்வாதிகளிடம் ஆளுமை இல்லை; காமராஜர் பிறந்த நாள் விழாவில் வருத்தம்

இன்றைய அரசியல்வாதிகளிடம் ஆளுமை இல்லை; காமராஜர் பிறந்த நாள் விழாவில் வருத்தம்

குன்னுார்; 'எளிமை, நேர்மை, ஆளுமை, தலைமை பண்பு ஆகியவை இன்றைய அரசியல்வாதிகளிடம் இல்லாமல் போனது தற்போதைய பேரிடர்,' என, காமராஜர் பிறந்தநாள் விழாவில் தெரிவிக்கப்பட்டது.பாலகொலா டாக்டர் கே.ஜே.ஜி., நினைவு மெட்ரிக் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் யஸ்வந்த் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,''கல்வி அறியாமை இருளில் அழுத்தி இருந்த தமிழகத்தை, கல்வியால் வெளிச்சம் பாய்ச்ச முடியும் என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்திய, தமிழகத்தின் முதல் சமூக விஞ்ஞானி காமராஜர். அவரின் எளிமை, நேர்மை, ஆளுமை தலைமை பண்பு ஆகியவை இன்றைய அரசியல்வாதிகளிடம் இல்லாமல் போனது பேரிடர் எனலாம்,'' என்றார்.தொடர்ந்து, காமராஜர் குறித்த வில்லுப்பாட்டு நாடகம், நடனம் ஆங்கிலம் மற்றும் தமிழில் பேச்சு போட்டி போன்றவை நடந்தது. மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !