உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி அருகே வனத்துறை அனுமதி பெறாமல் சுற்றுலா; தனியார் எஸ்டேட்டுக்கு அபராதம்

ஊட்டி அருகே வனத்துறை அனுமதி பெறாமல் சுற்றுலா; தனியார் எஸ்டேட்டுக்கு அபராதம்

ஊட்டி; ஊட்டி அருகே, அனுமதி பெறாமல் சுற்றுலா நடத்தியது கண்டறியப்பட்டதால், தனியார் எஸ்டேட் நிர்வாகத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஊட்டி அருகே கவர்னர்சோலா வனச்சரகம், கொள்ளிக்கோடு மந்து சுற்று பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. அங்குள்ள அங்கர்போர்டு எஸ்டேட் உரிமையாளர் மற்றும் மேலாளர் வனத்துறை சட்ட விதிகளுக்கு முரணாக, சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்தும், துறை அனுமதி பெறாமல் சுற்றுலா நடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்படி, கவர்னர்சோலை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், அங்கர்போர்டு எஸ்டேட் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் கொடுத்து, விசாரணை மேற்கொண்டார். குற்றச்செயலை ஒப்பு கொண்டதன் அடிப்படையில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ