உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சுற்றுலா வாகனம் கடையில் மோதி விபத்து: உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

 சுற்றுலா வாகனம் கடையில் மோதி விபத்து: உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

கூடலுார்: சுற்றுலா வாகனம், சாலையோர கடையில் மோதிய விபத்தில், 25 சுற்றுலா பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். கேரளா மாநிலம், மேப்பாடி பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள், 25 பேர்தனியார் சுற்றுலா வாகனத்தில் நேற்று முன்தினம், ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று விட்டு, இரவு கூடலுார் நோக்கி வந்தனர். சுற்றுலா வாகனத்தை சிபூ என்பவர் ஓட்டி வந்தார். இரவு, 11:00 மணிக்கு நகராட்சி அலுவலகம் கொண்டை ஊசி வளைவு பகுதியில், சுற்றுலா வாகனம், கட்டுப்பாட்டு இழந்துபூட்டப்பட்டிருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், கடையின் முன் பகுதி சேதமடைந்தது. விபத்தில், சுற்றுலா பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள், கூடலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை