உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர் குதுாகலம்

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர் குதுாகலம்

ஊட்டி; ஊட்டியில், கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் படகு இல்லம் சென்று படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், இ-பாஸ் நடைமுறையும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஜூன், 30 வரை தினமும், 6,000 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி, வார நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில், 8,000 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணியர் இதமான காலநிலையை ரசித்தவாறு படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினர்.இங்கு சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார், மிதி படகு , துடுப்பு படகு என, 140 படகுகள் இயக்கப்பட்டு வருவதால், அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை