உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையிலும் பழ கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள்

மழையிலும் பழ கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள்

குன்னுார்; குன்னுாரில் மழை பெய்த போதும், சிம்ஸ்பூங்காவில் பழ கண்காட்சியை திரளான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 65வது பழகண்காட்சி கடந்த, 3 நாட்களாக, நடந்தது. நடப்பாண்டு, 4 நாட்கள் நடத்தப்படும் பழ கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது. 3.8 டன் பழங்களில், 'ஹாலிடே பிக்னிக்' பெயரில், 'பழமையான கார், கேக், ஐஸ்கிரீம், எலுமிச்சை, தொப்பி விசில், இளநீர்,' உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.குன்னுாரில் நேற்று காலையில் மழை நீடித்த நிலையில், மதியம் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இதமான காலநிலை நிலவியது. சுற்றுலா பயணிகளின் வருகையும் ஓரளவு அதிகரித்தது. அவ்வப்போது பெய்யும் சாரல் மழையில், குடைகள் பிடித்தும், மழையில் நனைந்தும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் குதுாகலத்துடன் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை