மேலும் செய்திகள்
ஊட்டி சீசனுக்காக மூன்று சுற்று பஸ்கள் இயக்கம்
19-Apr-2025
ஊட்டி, ; ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்கள், அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்களை ரசிக்க செல்வது வழக்கம். கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாவரவியல் பூங்கா சாலையில் , சுற்றுலா பயணியர் நடந்து செல்ல நடைபாதை உள்ளது.அதில், உள்ளூர் வியாபாரிகள் பலர் கடை வைத்துள்ளனர். பூங்கா வரும் சுற்றுலா பயணியர் நடப்பாதையில் நடக்க முடியாமல் வேறு வழியின்றி சாலையில் குடும்பத்தாருடன் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பல நடைப்பாதை வியாபாரிகளுக்காக பூங்கா எதிரே நகராட்சி மூலம் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் நடைபாதையிலும் கடை வைத்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சுற்றுலா பயணிகள் செல்லும் அளவுக்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,''பூங்கா நடைபாதையில் கடை வைக்கக் கூடாது என , ஏற்கனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நகராட்சி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் இது போன்ற அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபடுவதாக புகார் வந்துள்ளது. ஆய்வு மேற்கொண்டு கடைகள் அகற்றப்படும்,''என்றார்.
19-Apr-2025