மேலும் செய்திகள்
ரயில்வே வாரிய தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
15-Feb-2026
ஊட்டி: -ரயில்வே பணியில் சேர பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இணைய தளத்தில் விண்ணப்பிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை; இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தால், தொகுதி ஈ பிரிவில் அடங்கிய, 22 ஆயிரத்து, 195 காலி பணியிடங்களுக்கான அறிக்கையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 33 வயதிற்குட்பட்ட பொது பிரிவினரும், 18 முதல், 38 வயதிற்கு உட்பட்ட இதர பிற்பட்ட வகுப்பினரும் www.rrbchennai gov.inஎன்ற இணைய தளத்தில், மார்ச், 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி இடத்திற்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, கூடுதல் கலெக்டர்அலுவலகத்தில் செயல்படும் பயிற்சி மையத்திலும், பந்தலூர் டீவ்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் பயிற்சி மையத்திலும், 14ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பத்திற்கான ஆவணங்களுடன் நேரிலோ, அல்லது 0423-- --2444004, 7200019666 தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
15-Feb-2026