உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாறைக்கல் சாலையில் பயணிப்பது சாகசம் தான்

பாறைக்கல் சாலையில் பயணிப்பது சாகசம் தான்

பந்தலூர் அக்.24-: பந்தலூர் பாறைக்கல் சாலையில், மழைநீர் மற்றும் கழிவு நீர் வழிந்தோட வழி இல்லாததால்., இப்பகுதி மக்கள் தினசரி சாகச பயணம் செய்யும் நிலை தொடர்கிறது. பந்தலூர் பஜாரின் மையப்பகுதியில் இருந்து, பாறைக்கல் கிராமத்திற்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. சாலையின் இரண்டு பகுதியிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளதுடன், இரும்பு பாலம், இண்கோ பள்ளம் பகுதிகளுக்கும் இந்த வழியாகவே செல்ல வேண்டும்.ஆனால் சாலையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் நிறைந்து, வழிந்தோட வழியில்லாமல் சாலையில், தேங்கி நிற்கிறது. இதனால் பாதசாரிகள் மற்றும் மாணவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது தண்ணீரில் தவறி விழாமல், இருப்பதற்காக சாகச பயணம் செய்யும் நிலை தொடர்கிறது. பெரும்பாலான நாட்களில் நடந்து செல்லும் மாணவர்கள், தவறி விழுந்து வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலையில், கழிவு நீரில் தினசரி நடந்து செல்வதால் பலருக்கும் தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதன் அருகே குடியிருப்புகள் உள்ள நிலையில், குடியிருப்பு வாசிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள், இப்பகுதியில் ஆய்வு செய்து, மழைநீர் மற்றும் கழிவு நீர் வழிந்தோட கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவும், பழுதடைந்த சாலையை சீரமைக்கவும் முன்வர வேண்டியது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை