சாலையில் விழுந்து வரும் மரங்கள்; ஆபத்தானவற்றை அகற்றணும்
ஊட்டி ; நீலகிரியில் வடகிழக்கு பருவ மழையின் எதிரொலியாக பரவலாக மழை பெய்து வருகிறது.பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதுடன், சில பகுதிகளில் வீடுகளும் சேதமாகியுள்ளது. ஊட்டி ஸ்பென்ஷர் சாலையில் இரு நாட்களுக்கு முன்பு பெரிய மரம் ஒன்று விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு வந்து பவர்ஷா உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. பொதுமக்கள் கூறுகையில், 'ஊட்டி நகரில் ஆங்காங்கே விழும் நிலையில் ஏராளமான கற்பூர மரங்கள் உள்ளன. அபாயகரமான மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்,' என்றனர்.