உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காசநோய் மருத்துவ முகாம் விழிப்புணர்வு பிரசாரம்

காசநோய் மருத்துவ முகாம் விழிப்புணர்வு பிரசாரம்

கோத்தகிரி; கோத்தகிரியில் பொது சுகாதாரம் மற்றும் நீலகிரி மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமையில், மருத்துவர்கள் ஷோபனா, அருண்குமார் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு, நெஞ்சுவலி, இரவில் வியர்த்தல் மற்றும் சளியில் ரத்தம் வருதல் போன்றவை காச நோயின் அறிகுறிகளாகும். காசநோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், உலக சுகாதாரம் நிறுவனம் பரிந்துரைக்கும் உலக தரம் வாய்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், சிகிச்சை காலம் முடியும் வரை, 1,000 ரூபாய் ஊட்டச்சத்து உதவி தொகையாக வழங்கப்படும்.தவிர, காச நோயாளியை பரிந்துரை செய்யும் தனியார் மருத்துவருக்கு ஊக்க தொகையாக, 1,000 ரூபாய், தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், 1,000 ரூபாய் ஊட்டச்சத்து உதவி தொகை வழங்கப்படும். அனைவரும் ஒன்று சேர்ந்து காசநோய் இல்லாத நீலகிரியை உருவாக்குவோம்,' என்றனர்.தகவலுக்கு, 'துணை இயக்குனர் (காசநோய்) 0423-2446951என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை