உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை மாத்திரையுடன் இருவர் கைது

போதை மாத்திரையுடன் இருவர் கைது

பாலக்காடு; பாலக்காட்டில் போதை மாத்திரையுடன் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட, எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி ஸ்ரீகிருஷ்ணாபுரம் எஸ்.ஐ., முரளிதரன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, கோட்டப்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், 9.63 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரையை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர். விசாரணையில், கடம்பழிப்புரம் பகுதியைச் சேர்ந்த முர்ஷித், 21, என்பது தெரிந்தது.* சித்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணாதாஸ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மேத்யூ தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு தத்தமங்கலம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், சந்தேகிக்கும் வகையில் இருந்த நபரிடம் நடத்திய சோதனையில், 0.510 கிராம் எடை கொண்ட 'ஆம்பிடமைன்' என்ற போதை மாத்திரையை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். விசாரணையில், குழல்மன்னம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத், 21, என்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ