உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் இரு நாள் ரெட்அலெர்ட் ; தேசிய பேரிடர் குழுவினர் முகாம்

நீலகிரியில் இரு நாள் ரெட்அலெர்ட் ; தேசிய பேரிடர் குழுவினர் முகாம்

ஊட்டி; நீலகிரி மாவட்டத்திற்கு இரு நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் குழுவினர் ஊட்டிக்கு வந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலுார் பகுதிகளிலும் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊட்டியில், கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறியாவது,''மாவட்டத்தில் கனமழையை பாதிப்புகளை கண்காணிக்க, 42 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மழையின் தீவிரத்தை பொறுத்து, முக்கிய சுற்றுலா தலங்களை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும். பொதுமக்கள், அபாயகரமான மரங்களின் கீழ் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு படையினர், நெடுஞ்சாலை துறையினர், தேசிய பேரிடர் குழுவை சேர்ந்த, 30 பேர் தயார் நிலையில் உள்ளனர்,'' என்றார்.கல்வி அதிகாரி கூறுகையில்,'நாளை (இன்று) பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தனியார் பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி