லாரி - பைக் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட இருவர் பலி
கூடலூர்: கூடலூரில், லாரி - பைக் மோதி விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரில் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், 40 வயது நபர் 7 வயது சிறுவனுடன், பைக்கில் வந்தார். அதே வழித்தடத்தில் வந்த லாரியுடன் - பைக் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், பைக்கில் வந்த நபரும், சிறுவனும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். போலீசார் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து மற்றும் விபத்தில் இறந்தவர்கள் குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.