உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சீரமைக்காத மழைநீர் கால்வாய்; வீடுகளுக்குள் வெள்ளம்

சீரமைக்காத மழைநீர் கால்வாய்; வீடுகளுக்குள் வெள்ளம்

குன்னுார் ; குன்னுார் குமரன் நகரில் மழைநீர் கால்வாய் முழுமையாக சீரமைக்காததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 16வது வார்டு குமரன் நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.இங்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை சீரமைக்கப்பட்டது. தற்போது, பல இடங்களிலும் சேதமடைந்தது அங்குள்ள மழைநீர் கால்வாயில் குப்பை மற்றும் மண் அடித்து வரப்பட்டு பல இடங்களிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பகுதிக்கு அருகில் உள்ள பகுதியில் சமீபத்தில் மழையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின், 'நகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய் அடைப்புகளை சீர் செய்ய வேண்டும்,' என, உள்ளூர் மக்களும் வலியுறுத்தி உள்ளனர். எனவே, இந்த பகுதிகளை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்து, நடைபாதையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை