உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தமிழக எல்லையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்

தமிழக எல்லையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்

பந்தலுார் : மாநில எல்லையான தாளூர் பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர் கணபதி மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ள மனு:பந்தலுார் அருகே தாளூர் பகுதி மாநில எல்லையில் உள்ளது. இங்குள்ள சோதனை சாவடி எதிரே, தமிழக எல்லைக்குள் இருந்த நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரள மாநில அரசு மூலம், கேரளாவுக்கு சொந்தமான நிலமாக மாற்றம் செய்யப்பட்டு, அங்கு கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கட்டடங்களை கட்டி உள்ளனர்.அதற்கு எதிரே, தமிழக சோதனை சாவடியை ஒட்டிய, தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், இந்த கடைகளில் 'சில்லிங்' மது விற்பனை நடப்பதால், குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது, கல்லுாரி மாணவர்களிடையே தகராறும் ஏற்படுவது தொடர்கிறது. சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் கட்டப்பட்டுள்ளதால், இரு மாநில அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்த இடம் இல்லாமல், சாலையில் நிற்க வேண்டிய சூழல் தொடர்கிறது. எனவே, இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு எல்லையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை