உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுகாதாரமற்ற குடிநீர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சுகாதாரமற்ற குடிநீர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

குன்னுார்; குன்னுார் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் காரணமாக மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் ஆழ்வார் பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நுரை தள்ளிய குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் ராமர் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகள் உட்பட, 11 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அம்பேத்கர் நகர். மக்களும் சுகாதார குடிநீருக்காக சமயபுரம் ஆழ்வார்பேட்டை பகுதிக்கு வந்து கிணற்று நீரை எடுத்து சென்று பயன்படுத்துகின்றனர்.நேற்று இப்பகுதி மக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். எனவே, குடிநீரை ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி