உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூட்டி கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகம்; கடும் அதிருப்தியில் உள்ளூர் மக்கள்

பூட்டி கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகம்; கடும் அதிருப்தியில் உள்ளூர் மக்கள்

கூடலுார்; கூடலுார், தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், தொரப்பள்ளியில், கட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தை கடந்த செப்., 2003ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த அலுவலகம், இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்த அலுவலகம் துவக்கத்தில், சில ஆண்டுகள் முறையாக செயல்பட்டது. பின், பயன்படுத்தாமல் மூடப்பட்டது. பூட்டி கிடக்கும் கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பராமரிப்பின்றி பயனற்று காணப்படுகிறது. வி.ஏ.ஓ., இங்கு வருவதில்லை.இதனால், மக்கள், வருவாய் துறை தொடர்பான பணிகளுக்கு, கூடலுார் சென்று வி.ஏ.ஓ.,வை சந்தித்து வருகின்றனர். இதனால், சிரமங்கள் ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.மக்கள் கூறுகையில், 'தொரப்பள்ளியில் வி.ஏ.ஓ., அலுவலகம், செயல்பட்டு வந்தது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக இவை மூடப்பட்டு பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால், மக்கள் கூடலுார் சென்று, விஏ.ஓ., பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை தவிர்க்க, வி.ஏ.ஓ., அலுவலகத்தை சீரமைத்து திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை