உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகன விபத்து; ஒருவர் பலி

வாகன விபத்து; ஒருவர் பலி

கூடலுார் : திருச்சி துறையூரை சேர்ந்தவர் பிரணவ், 22. இவரும் அதே பகுதியை செர்ந்த ஸ்ரீதரன் என்பவரும், இருசக்கர வாகனத்தில் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள், கூடலுார் வந்துவிட்டு நேற்று மாலை ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். 4:30 மணிக்கு, நடுவட்டம் - டி.ஆர்., பஜார் அருகே, எதிரே வந்த காரும்; பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில், பிரணவ் சம்பவ இடத்தில் பலியானார். அவர் உடல் கூடலுார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த ஸ்ரீதரன் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நடுவட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை