வேளாண் மையத்தில் பூண்டு ஏலம் நடவடிக்கை
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குனர் கண்ணாமணி கூறுகையில், ''குன்னுார் ஒருங்கிணைந்த வேளாண் மையம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாவட்டத்தில் விளையும் பொருட்களை குடோனில் பாதுகாத்து வைக்கவும், ஏலம் விடவும், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் விவசாயிகள் மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு செல்கின்றனர். பூண்டு விளைச்சல் தற்போது எடுக்கும் தருவாயில் உள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த வேளாண் மையத்தில் பூண்டு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-,''என்றார்.