உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / துணை ஜனாதிபதி தேர்வு; பா.ஜ. கொண்டாட்டம்

துணை ஜனாதிபதி தேர்வு; பா.ஜ. கொண்டாட்டம்

ஊட்டி; துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.,ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நாட்டின், 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், 452 ஓட்டு களை பெற்று, 'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டியை வீழ்த்தி துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, ஊட்டியில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தருமன் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 15 வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டி ஏ.டி.சி.,யில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை