கரிமொரா கிராமத்துக்கு மீண்டும் பஸ் இயக்க கிராம மக்கள் மனு
ஊட்டி; கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி, கரிமொரா கிராம மக்கள் கலெக்டரிடம் மனு:குன்னுார் தாலுகா பகுதியில் உள்ள கரிமொரா கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கொரானா தொற்று பாதிப்பின் போது நிறுத்தப்பட்ட பிறகு மீண்டும் இயக்கவில்லை. இதனால், கரிமொரஹட்டி, கரோலினா, பெரியார் நகர், சந்திரா காலனி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் பெரிதும் சிரமத்தில் உள்ளனர்.பள்ளி செல்லும் குழந்தைகளும், மருத்துவமனைக்கு செல்வோரும், தினசரி வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாலை நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் நடந்து செல்ல முடியாது. எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க வேண்டும். இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும், இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.