மேலும் செய்திகள்
விதிமீறல் கட்டடத்திற்கு 'சீல்' வைப்பு
15-Mar-2026
குன்னுார்: குன்னுார் வேளாங்கண்ணி நகரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்திற்கு நகராட்சி சார்பில் 'சீல்' வைக்கப்பட்டது. குன்னுார் வேளாங்கண்ணி நகரில் விதி மீறி, 3 அடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருவது. நடைபாதையில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருவது தொடர்பாக நகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில், ஆளும்கட்சியினர் தலையீடு இல்லாததால், ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
15-Mar-2026