உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உயிர் சூழல் மண்டல விழிப்புணர்வு; அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

உயிர் சூழல் மண்டல விழிப்புணர்வு; அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

மஞ்சூர் ; மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில், உயிர்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசன், உயிர் சூழல் பாதுகாப்பு குறித்த கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''உயிர் சுழல் காப்பகம் ஆபத்தின் விளிம்பில் உள்ளது. தாவரங்கள், விலங்கினங்களின் வாழ்க்கை சூழல், என்றும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம், நகரமயமாக்குதல் பணிகள் போன்ற பல்வேறு காரணிகள், இயற்கை சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதுபோன்ற கண்காட்சிகள் நடத்துவதால், இயற்கையை பாதுகாப்பதற்கு மாணவர்களை முன்னெடுத்து செல்ல பெரும் உதவியாக அமையும்,'' என்றார்.ஆசிரியர் பாபி பேசுகை யில், ''தேசிய பசுமை படை, பள்ளி மாணவர்கள் மத்தியில், இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவதுடன், அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது சிறப்புக்கு உரியது. இந்த நடவடிக்கை தொடர வேண்டும்,'' என்றார்.தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், ''நீலகிரி உயிர் சூழல் காப்பகத்தில் அழிந்து வரும்தாவரங்கள், விலங்குகள், இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, நீலகிரியில் காணப்படும் வனவளம், மூலிகை தாவரங்கள், பறவைகள் மற்றும் காடுகளின் தன்மைகள்,' குறித்த 'போட்டோகளை' காண்பித்து விளக்கம் அளித்தார். மேலும், நீலகிரி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைத்து, அவற்றை மறு சுழற்சிக்கு எடுத்து செல்வதன் அவசியம் குறித்து, மாண வர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பசுமை படை பொறுப்பாசிரியர் ஜெயஸ்ரீ மற்றும் ஓவிய ஆசிரியர் சகாயதாஸ் ஆகியோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேச்சு போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி