உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவில் நிலங்களை மீட்க விஷ்வ ஹி ந்து பரிஷத் வலியுறுத்தல்

கோவில் நிலங்களை மீட்க விஷ்வ ஹி ந்து பரிஷத் வலியுறுத்தல்

குன்னுார்: நீலகிரியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில், நிலங்கள் மீட்க வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் வள்ளுவர் நகர், கருமாரியம்மன் கோவில் மண்டபத்தில், தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத், நீலகிரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளர்களாக,மாவட்ட இணை அமைப்பாளர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சங்கர் முன்னிலை வகித்தார். வக்கீல் அணி மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், கோவை மண்டல் இணைஅமைப்பாளர் ரங்கசாமி பங்கேற்று பேசினர்.குன்னுார் நகர செயலாளர் ரமேஷ்பாபு வரவேற்றார். கூட்டத்தில், 'அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும், ஓய்வூதியம், 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்;அனைத்து மாத ஊக்கதொகையாக, 10ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; கிராம கோவில்களுக்கு இலவச மின்சார வழங்க வேண்டும்; ஓய்வூதியம் பெரும் பூசாரிகள் இறந்தால், ஓய்வூதிய தொகையை அவரது மனைவிக்கு வழங்க வேண்டும்; நீலகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த,கோரிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பேரவை முடிவு செய்துள்ளது. குன்னுார் நகர தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை