தெரு நாய்கள் உலா
ஊட்டி; ஊட்டி நகரில் தெரு நாய்கள் பிரச்னை அதிகரித்துள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊட்டி நகரில் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், கமர்ஷியல் சாலை, தாவரவியல் பூங்கா பகுதி, கலெக்டர் அலுவலக சாலைகளில் பகல் நேரத்தில் தெரு நாய்கள் உலா வருவகின்றன. சில நாய்கள் பள்ளி, மாணவ, மாணவியரை துரத்தி வருகின்றன. இதனால், பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறது.எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, தெரு நாய் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.