உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுலா வாகனங்களுக்கு எச்சரிக்கை

சுற்றுலா வாகனங்களுக்கு எச்சரிக்கை

குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில், கடும் மேகமூட்டம் நிலவுகிறது. குன்னுார் இன்ஸ்பெக்டர் சதீஷ் கூறுகையில், ''மலை பாதையில் தற்போது, கடும் மேகமூட்டம் நிலவுவதால், புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில், கட்டாயம் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்த வேண்டும்; 'ஓவர்டேக்' செய்வதை தவிர்க்க வேண்டும்; மலைப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு கீழ் நோக்கி செல்லும் வாகனங்கள், இரண்டாவது கியரை மட்டுமே பயன்படுத்துவதுடன், தொடர்ந்து பிரேக் பிடித்து கொண்டே செல்லக்கூடாது; மேல்நோக்கி வரும் வாகனங்கள், 2,3வது கியர்களை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை