மேலும் செய்திகள்
புளியங்காடு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
21-Oct-2025
ஊட்டி: - மழையால் குன்னூர் - -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆங்காங்கே புதிதாக தோன்றியுள்ள அருவிகளை சுற்றுலா பயணியர் ரசித்தவாறு மலை பாதையில் பயணித்து வருகின்றனர். நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் அக்., முதல் டிச., வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டு கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை குன்னூர், கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குன்னூர் -- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மரப்பாலம்,சின்ன குரும்பாடி, லாஸ் நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளில் உள்ள அருவிகளில தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குன்னூர் பகுதியில் திடீரென்று பல இடங்களில் மலை பாதையோரம் அருவிகள் மற்றும் சிறிய நீர் வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் மலைப்பாதையோரம் கொட்டுவதால் அந்த வழியாக பயணிக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதோடு செல்பி, போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். சமவெளி பகுதிகளில் இருந்து இரு சக்கரம் மற்றும் கார்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது அடர்ந்த வனப் பகுதியின் மத்தியில் ஆங்காங்கே தெரியும் அருவிகளில் வெள்ளி உருகுவது போல் தண்ணீர் கொட்டுவது கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கிறது. மழை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அருவிகளில் நீர் கூடுதலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலையோரம் அருவிகளுக்குள் சென்று குளிக்க கூடாது என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
21-Oct-2025