உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் ரேலியா அணையில் 41 அடி வரை நீர்மட்டம் உயர்வு

குன்னுார் ரேலியா அணையில் 41 அடி வரை நீர்மட்டம் உயர்வு

குன்னுார்; குன்னுாரில் கோடை காலத்தில், மழையின் தாக்கம் அதிகமானதால் ரேலியா அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.குன்னுார் நகராட்சியின், 30 வார்டுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ரேலியா அணையில், ஆண்டுதோறும் கோடை காலத்தில் தண்ணீர் குறைந்து காணப்படும். கடந்த ஆண்டுகளில் முழுமையாக வறண்டு காணப்பட்டது.இந்நிலையில், நடப்பாண்டு கோடை காலத்தில் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கம் அதிகரித்த நிலையில், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. 43.7 அடி கொண்ட ரேலியா அணையில், 41 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கும் நிலையில், இந்த அணையில் இருந்தும் நகர் பகுதிக்கு பாதிப்பின்றி, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இங்கு உபரி நீர் வெளியேறும் இடத்தில், களைச்செடிகள் முளைத்துள்ளதால், அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, இவற்றை அகற்றி பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ