வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தாகம் தணிக்க தர்பூசணி
குன்னுார் ; நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்கள், தடை விதிக்கப்பட்டதால் குடிநீருக்கு பலரும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், பீசலு அறக்கட்டளை மற்றும் சத்ய சாய் சேவா மாருதி அறக்கட்டளை சார்பில், கடந்த, 22ம் தேதியிலிருந்து, நீர் மோர் பந்தல் அமைத்து, தினமும் மக்களுக்கு நீர் மோர் உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர். நேற்று விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில், மக்களுக்கு நீர் மோருடன், தர்பூசணியும் வழங்கினர். இதனை இன்ஸ்பெக்டர் சதீஷ் துவக்கி வைத்தார்.