உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மலை பாதையில் காட்டு யானைகள் முகாம்

 மலை பாதையில் காட்டு யானைகள் முகாம்

குன்னுார்: குன்னுார் பர்லியார் பகுதிக்கு, 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இரவு நேரத்தில் குட்டிகளுடன் வந்த யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளன. குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையோரங்களில் கடந்த ஜூலை மாதம் இறுதியில், 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உலா வந்தன. தொடர்ந்து, சமவெளி பகுதிக்கு சென்றிருந்த யானைகள், 3 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் வாழையார் பகுதிக்கு வர துவங்கியுள்ளன. நேற்று காலை, 7:00 மணியளவில், பார்லியார் அருகே சாலை ஓரத்தில் இரு குட்டிகளுடன், 6 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இவை பர்லியார் குடியிருப்பு மற்றும் மலைப் பாதையில் உலாவரும் என்பதால் மக்கள அச்சத் தில் உள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'அவ்வப்போது சாலையை யானைகள் கடக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் மித வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்,' என்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை