மேலும் செய்திகள்
ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
24-Mar-2025
கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளி பகுதியில் நுழையும் காட்டு யானைகள் பாகற்காய் பந்தலை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கூடலுார், தொரப்பள்ளி பகுதிக்கு காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, வனத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளனர். எனினும், சில காட்டு யானைகள், இரவில் அகழியை கடந்து தொரப்பள்ளி குணில்வயல் பகுதியில் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் நுழைந்த காட்டு யானை, ராதாகிருஷ்ணன், நாராயணன், சிவா, விஜயா ஆகியோரின் பாகற்காய் பந்தல்களை சேதப்படுத்தியது. இதனால், நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24-Mar-2025